ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்ல முற்பட்டபோது, மதுபோதையில் தள்ளாடிய இரண்டு இளைஞர்களை வழிவிட நடத்துனர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பேருந்தில் இருந்த நடத்துனரை சரமாரியாக தாக்கினர்.
மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இரு இளைஞர்களுக்கு தர்ம அடி! - tirupur
திருப்பூர்: பழைய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்
இதனை பார்த்த பொதுமக்கள் கோபமடைந்து, இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த நடத்துனர் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இரண்டு இளைஞர்களும் சிதம்பரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பதும், இருவரும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.