திருப்பூர், கொங்கணகிரி வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெருநாய்கள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்கள் எப்படி இறந்தன என்று நோட்டமிட்டுள்ளனர். அப்போது அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாய்களுக்கு உணவளிப்பதும், அதனை சாப்பிட்ட சில நேரத்தில் நாய்கள் இறப்பதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
வாயில்லா ஜீவன்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி; மக்கள் புகார்! - Fish
திருப்பூர்: தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரியை கைது செய்யக்கோரி பொதுமக்கள், வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்ததில், வீடியோவில் இருப்பவர் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி கோபால் என்பதும், இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது நாய்கள் குரைத்து வாகனத்தை துரத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மீன் பிடிக்க பயன்படுத்தும் மருந்தை உணவில் கலந்து தெருக்களில் உள்ள நாய்களுக்கு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட நாய்கள் அடுத்தடுத்து இறந்துள்ளன. இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து கொங்கணகிரி வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு, சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் பொதுமக்கள் இன்று புகார் அளித்துள்ளனர். நாய்களை விஷம் வைத்துக் மீன் வியாபாரி கொல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.