திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன்(55). இவர் தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 14ஆண்டு சிறை - 14ஆண்டு சிறை
திருப்பூர்: சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாதேவன்
இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 14 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.