அவிநாசியை அடுத்து தெக்கலூர் அருகே உள்ள சூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி பத்மாவதி தங்களது வீட்டின் அருகே இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பிரிவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி துளசிமணி, அவரது உறவினர் ஜெயமணி ஆகியோருடன் தண்ணீர் பிடிப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவிநாசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - water
திருப்பூர் மாவட்டம் : அவிநாசியை அடுத்து தெக்கலூர் அருகே குழாய் தண்ணீர் பிடிப்பதில் இரு பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதலில் ஈடுபட்டவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அன்று மாலை வெளியில் சென்ற விஜயகுமாரை வேலுச்சாமியின் மகன் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியதாகவும், இதனால் விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதைத் தொடர்ந்து பத்மாவதியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் அவிநாசி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்மாவதி, அவர் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவிநாசி காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் அவிநாசி - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.