தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கை ரேகைகளில் தேசியக் கொடி - உலக சாதனை முயற்சி - indian flag

திருப்பூர்: அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக நேதாஜி மைதானத்தில் இன்று 73 தன்னார்வலர்கள் 26 நிமிடங்களில் தங்களது கை ரேகைகள் மூலம் தேசியக் கொடியை வடிவமைத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

கை ரேகைகளைக் கொண்ட மூவர்ணக் கொடி

By

Published : Jul 27, 2019, 6:36 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, 73ஆம் சுதந்திர தினத்தையொட்டி 73 சமூக ஆர்வலர்கள் 112 உதவி எண்ணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும், மறைந்த அப்துல் கலாமை நினைவூட்டும் வகையிலும் 112 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட துணியில் தங்களது கை விரல்களை பதித்து தேசியக் கொடியை வடிவமைத்தனர்.

26 நிமிடத்தில் கை விரல்களை பதித்து மூவர்ணக்கொடியை வடிவமைத்த 73 தன்னார்வலர்கள்

இதற்கு முன்பு 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 69 பேர் இதேபோன்று செய்ததே உலக சாதனையாக உள்ளது. அவர்கள் 30 நிமிடங்களில் சுமார் 65 ஆயிரம் கைரேகைகளை பதிவு செய்தனர்.

உலக சாதனை முயற்சி

எனவே அதை முறியடிக்க வேண்டும் என்று நேதாஜி மைதானத்தில் இன்று 73 தன்னார்வலர்கள் 26 நிமிடங்களில் தங்களால் முடிந்த அளவு தங்களது ரேகையை பதிவிட்டனர்.

எனினும், உலக சாதனை முறியடிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று டிசிபி உலக சாதனைகள் அமைப்பைச் சேர்ந்த செந்தில் கூறினார்

26 நிமிடத்தில் கை விரல்களை பதித்து மூவர்ணக்கொடியை வடிவமைத்த 73 தன்னார்வலர்கள்


.

ABOUT THE AUTHOR

...view details