தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காட்டுயானை தான் இருப்பினும் மக்கள் தள்ளி நின்று பார்க்கவும்..!'- அமைச்சர் வேண்டுகோள் - inspection

திருப்பூர்: "அமைதியான யானை என்றாலும் காட்டுயானை தான் என்பதை பொதுமக்கள் கருத்தில் கொண்டு தள்ளி நின்று பார்க்க வேண்டும்" என்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காட்டுயானை

By

Published : Feb 6, 2019, 10:47 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சர்க்கரை மில் பகுதியில் 6-வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானையின் செயல்பாடுகள், உடல்நலம் ஆகியவை குறித்தும் யானையால் சர்க்கரை ஆலை தொழிலாளர் குடியிருப்பில் சேதம் அடைந்தது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அமைச்சர் நின்றிருந்த இடத்திற்கே சின்னதம்பி யானை வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அங்கு வந்திருந்த கும்கி யானைகளையும் அருகில் சென்று பார்வையிட்டார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது, மூன்று குழுக்களாக பிரிந்து மொத்தம் 66 பேர், சின்னதம்பி யானையை கண்காணித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் யானையை பிடிப்பதில் காலதாமதம் ஆகிவருகிறது. வனத்துறை அமைச்சர் அரசு வழக்கறிஞரை கலந்து ஆலோசித்து வருகிறார். இந்த விவகாரத்தில் வரும் 11-ம் தேதி நிச்சயமாக ஒரு நல்ல தீர்வு எடுக்கப்படும்.

அமைதியான யானை என்றாலும் காட்டுயானைதான் என்பதால் பொதுமக்கள் அருகில் செல்லவேண்டாம். யானை அது இருந்த இடத்திற்கே கொண்டு சென்று விட ஏற்பாடு செய்வதற்கு வனத்துறை அமைச்சரிடம் பேசியிள்ளேன். அவரும் அதுகுறித்து ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கிறார், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details