தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வரவேண்டும்’- கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

திருப்பூர்: தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

By

Published : Mar 17, 2021, 9:45 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கிடையில் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மடத்துக்குளம் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் குமரேசனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வரவேண்டும். அது வந்தால்தான் உங்கள் வாழ்க்கையின் தரம் , நிறம் மாறும். நாங்கள் பல நல்ல திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டை மேம்படுத்தப் பல அலுவலர்கள் ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் திட்டங்களை வகுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.

கமல்ஹாசன்

மடத்துக்குளம் தொகுதியில் அவர் பரப்புரை மேற்கொள்ளும் போது 50க்கும் குறைவான மக்கள் நின்று கொண்டிருந்ததால், அவர் தனது பேச்சை 3 நிமிடத்திலேயே முடித்துக்கொண்டார். உடுமலைப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொள்வதாக கமலின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் இடத்திலேயே மிகக் குறைவான ஆட்கள் இருந்ததால் உடுமலைப்பேட்டை தொகுதி பரப்புரையை ரத்து செய்துவிட்டு கமல் ஹெலிகாப்டரில் நேரடியாக ஈரோட்டிற்குக் கிளம்பிச் சென்றார்.

இதையும் படிங்க:’பாட்ஷா’வாக மாறிய கமல்

ABOUT THE AUTHOR

...view details