திருப்பூர் மாவட்ட மதிமுக துணைச் செயலராக கவின் நாகராஜ் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான வீடு, தாராபுரம், அலங்கியம் சாலையில் அமைந்துள்ளது. இதற்கிடையில் அவரது வீட்டிற்கு வருமான வரித்துறையினர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்டோர் சென்று நேற்று (மார்ச்.17) சோதனையில் ஈடுபட்டனர்.
மதிமுக, திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பூர்: மதிமுக, திமுக நிர்வாகிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறையினர் சோதனை
அதேபோல் சென்னியப்பா நகரில் உள்ள திமுக நகரச் செயலர் தனசேகரின் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சென்று தொடர் சோதனையிட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகள் இரண்டு பேரின் வீடுகள் முன்பும் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் மதிமுக, திமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.