திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலமுருகன் என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரை பேராசிரியர் பாலமுருகன் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி women helpline 181 எந்த என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மாணவி அளித்த தகவலின் படி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மீது புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மீது போலீசார்வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தமிழ் பேராசிரியர் பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், வழக்கு பதிவு செய்து ஒருவார காலம் ஆகியும் பேராசிரியரை கைது செய்யாதது ஏன்? எனவும் உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று (ஆக.22) முப்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியின் நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.