தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் இன்று 99 பேருக்கு கரோனா உறுதி! - tirupur corona deaths

திருப்பூர்: இன்று மட்டும் 99 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 875ஆக உயர்ந்துள்ளது.

hospital
hospital

By

Published : Aug 21, 2020, 9:17 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தீநுண்மி தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.

கிருமிநாசினி தெளிப்பு
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 99 பேருக்கு கரோனா‌ நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 875ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் இன்று ஏதுமில்லை, மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details