தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

144 தடையை மீறி சாலையில் உலா - நூதன தண்டனை வழங்கிய காவலர்கள் - Tirupur curfew

திருப்பூர்: 144 தடையை மீறி சாலையில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

நூதன தண்டனை வழங்கிய காவலர்கள்
நூதன தண்டனை வழங்கிய காவலர்கள்

By

Published : Mar 26, 2020, 11:07 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி மக்கள் பொழுதுபோக்கும் விதமாக வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் செக்போஸ்ட் பகுதியில் அநாவசியமாய் வந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களை வெயிலில் நிற்க வைத்து 50 தோப்புக்கரணம் பேடச் செய்தனர். பின்னர் அவர்களை 30 நிமிடங்கள் இடைவிடாது கை தட்ட வைத்து அங்கிருந்து அனுப்பினர்.

நூதன தண்டனை வழங்கிய காவலர்கள்

தொடர்ந்து, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:தடையை மீறி சுற்றியவர்கள் - நூதன தண்டனை வழங்கிய காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details