தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்மயானம் அமைக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து தேர்தலை புறக்கணித்த மக்கள்! - boycott election

திருப்பூர்: பல்லடம் அருகே மின்மயானம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை மக்கள் புறக்கணித்தனர்.

மின்மயானம் அமைக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து தேர்தலை புறக்கணித்த மக்கள்!

By

Published : Apr 18, 2019, 10:47 PM IST


திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ப.வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கிட்டாபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்டகால கோரிக்கையான மின்மயானத்தை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெங்கிட்டாபுரத்தில் நீராதாரமாக விளங்கிய குட்டை அருகே நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது.

இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குட்டையை ஆக்கிரமித்து மின்மயானம் கட்டினால் தங்களது நீராதாரம் பாதிக்கப்படும் என்றும் இதனால் கால்நடைகள், மனிதர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

அந்த வாக்குச்சாவடியில் ஒருசிலர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்தம் 1091 வாக்குகள் கொண்ட அந்த மையத்தில் வெறும் 103 வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதமுள்ளவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details