திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நூல் தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 70 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பின்னலாடைத் துறை மற்றும் அவை சார்ந்த தொழில்கள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றன.
இதையடுத்து நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும், பருத்தி மற்றும் நூல் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்து, உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனக்கோரியும், பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.