ஹாலோ பிளாக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திருப்பூர்:தமிழ்நாடு முழுவதும் கல் குவாரி உரிமையாளர்கள் கடந்த ஆறு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மொரட்டுப்பாளையத்தில் சங்க தலைவர் தங்கவேலு தலைமையில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6ஆவது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: Government Jobs: அரசுப் பணியிடங்களில் இனி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு
இதைத்தொடர்ந்து உடனடியாக ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுத்திவிட்டு வேலைநிறுத்தப்போராட்டத்தினை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் பங்கேற்று உள்ளனர். மேலும், கற்கள் விற்பனையும் முற்றிலும் நிறுத்தப்படுவதால், கட்டுமானப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கல்குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்திற்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த பிரதமரை உருவாக்கும் வியூகத்தை ஸ்டாலின் வகுத்துள்ளார் - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு
இதுகுறித்து ஹாலோபிளாக் உற்பத்தியாளர் சங்க வடக்கு மாவட்டத் தலைவர் சின்னச்சாமி கூறியதாவது, 'கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஹாலோ பிளாக் தயாரிப்பதற்கு மூலப்பொருள் கிடைக்காத நிலை உள்ளது. அவர்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக கேட்டுத் தீர்வு காண வேண்டும்.
கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தினை தொடங்கி இருக்கிறோம். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்படக்கூடும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குரங்கு கையில் பூமாலை.. ஆளுநரை கடுமையாக சாடிய திமுக நாளிதழ்!