அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் - அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
திருப்பூர்: அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.
![அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் மாணவர் சேர்க்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:41:48:1598256708-tn-tpr-01-govtschool-11thadmission-vis-7204381-24082020130313-2408f-1598254393-508.jpg)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இன்று (ஆகஸ்ட் 24) முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனை அடுத்து மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பள்ளியில் கொடுத்து வருகின்றனர்.
மாணவர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று ( ஆகஸ்ட் 24) விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வருவதாகவும், நாளை (ஆகஸ்ட் 25) முதல் மாணவர்கள் தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு நேரம் ஒதுக்கி மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.