தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஸ்வரூபமெடுத்த ஆழ்துளைக் கிணறு விவகாரம்: எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்! - ஆழ்துளை கிணறு

திருப்பூர்: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்பான முறையில் மூடிவைக்க வேண்டும், பாதுகாப்பற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Collector to alert the deep wells

By

Published : Oct 26, 2019, 10:08 PM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆழ்துளைக் கிணறுகள் பராமரிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் தனியாரும் அரசும் பல ஆழ்துளைக் கிணறுகளை நிறுவியுள்ளன. அவ்வாறு நிறுவப்பட்டுள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடி போட்டு மூடப்பட்டிருக்க வேண்டும். தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதமும் காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என்றார்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடிவைக்க எச்சரிக்கை விடுக்கும் ஆட்சியர்

இதையடுத்து, அனைத்துத் துறை ரீதியாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூடி போடாமல் ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்! - 24 மணி நேரமாக நீடிக்கும் மீட்புப் பணி

ABOUT THE AUTHOR

...view details