மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம்.. திருப்பூரில் ஏர் கலப்பை பேரணி! - திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏற்கலப்பை பேரணி
திருப்பூர்: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏர் கலப்பை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் ஏர்கலப்பை பேரணி
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஏர் கலப்பை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.