தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு தொழிற்சங்கம் மனு - Tirupur district News

திருப்பூர் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய நிதி நிறுவனம் தவணைத் தொகையை கேட்டு வற்புறுத்துவதாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tirupur citu people petition

By

Published : Jun 13, 2020, 4:42 AM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அனுப்பர்பாளையம் பெரியார் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் கடன் உதவி வழங்கியுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு மாத காலத்திற்கு தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகை கேட்டுவருவதாகவும் அவர்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாகவும் குற்றஞ்சாட்டி சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details