தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 பேர் - கரோனா இல்லாததால் விடுவிப்பு - திருப்பூரில் தனிமைப்பட்டிருந்த 21 பேர்

திருப்பூர்: சமய மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்களுக்கு, கரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் அரசு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்த 21 பேர், கரோனா நோய்த்தொற்று இல்லாததால் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

கரோனா பாதிப்பு இல்லாததால் வீட்டிற்கு அனுப்பி வைப்பு
கரோனா பாதிப்பு இல்லாததால் வீட்டிற்கு அனுப்பி வைப்பு

By

Published : Apr 18, 2020, 8:16 PM IST

கடந்த மாதம் டெல்லியில் சமய மாநாடு நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்கள் மாநிலத்திற்குச் சென்றனர்.

அதில் கலந்து கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பாலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் டெல்லி சென்று வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

கரோனா பாதிப்பு இல்லாததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 21 பேர்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 14 நாட்களாக தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த 21 பேருக்கு இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 21 பேரையும் மருத்துவர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டிலும் 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .

இதையும் படிங்க: கரோனா - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று 21 பேர் வீடு திரும்பினர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details