தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரிப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு! - Tiruppur Women accident dead

திருப்பூர்: திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஒரு பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Women accident by collage bus

By

Published : Oct 30, 2019, 4:41 PM IST

திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவன்மலை பகுதியில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்பதற்காக, தனது மாமியார் பார்வதியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

திருப்பூர் சந்திராபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு இருவரும் கீழே விழுந்தனர். பார்வதியின்மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதியினர், உடனடியாக பேருந்தை சிறைப்பிடித்தனர். காயமடைந்த கருப்பசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பார்வதியின் உடலை ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தலை நசுங்கி உயிரிழந்த பெண்

விபத்துக்குக் காரணமான தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமணத்திற்கு செல்லும் வழியில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சுகப்பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்த தாய்; மருத்துவமனையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details