தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 97 பேருக்கு கரோனா! - தமிழ்நாடு கோவிட் 19 செய்தி

திருப்பூர்: கரோனா பாதிப்பு 97 பேருக்கு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 241ஆக உயர்ந்துள்ளது

hospital
hospital

By

Published : Aug 27, 2020, 7:34 AM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீநுண்மி தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.

கிருமிநாசினி தெளிப்பு
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 26) ஒரே நாளில் மட்டும் 97 பேருக்கு கரோனா‌ தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 241ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்றிலிருந்து குணமடைந்து 182 பேர் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details