திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் பகுதியில் நியாயவிலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து அவர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள நியாயவிலை கடைக்கு மாற்றப்பட்டார். உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணையில் ராஜேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நியாய விலை கடையில் முறைகேடு: பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - நியாய விலை கடை
திருப்பூரி: நியாயவிலை கடையில் முறைகேட்டில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tiruppur ration shop issue
இந்நிலையில் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்ட பின்னும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், போயம்பாளையம் பழனிசாமி நகர் நியாயவிலை கடையில் ஆயிரத்து 350 நியாய விலை அட்டை உள்ள நிலையில் அவற்றை இரண்டு கடைகளாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.