வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.