தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி வியாபாரம் செய்பவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்! - Tiruppur murder case

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் ஊரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தண்டபாணி என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட  காய்கறி வியாபாரி
கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காய்கறி வியாபாரி

By

Published : Feb 27, 2021, 11:04 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் ஊரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தண்டபாணி(35) தனது மனைவி தேவி (33) ஆகியோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 17 நாள்களாக தண்டபாணியை காணவில்லை என உறவினர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

கொலை செய்தது யார்?

இந்த நிலையில் சனிக்கிழமை (பிப் 20) ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை புதிய மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில் சாக்குமூட்டையில் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

கிணற்றில் சடலமாக கிடந்த காய்கறி வியாபாரி

இந்தப் புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் உதவியுடன் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டெடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கிணற்றில் சடலமாக காய்கறி வியாபாரி

விசாரணையில் கிணற்றில் சடலமாக இருந்தது காய்கறி வியாபாரி தண்டபாணி எனத் தெரியவந்து. தொடர் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொலை எதற்காக செய்யப்பட்டது. கொலை செய்தது யார்? என காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சௌகார்பேட்டை கொலை சம்பவம்: புனேவுக்கு பறந்த தனிப்படை காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details