திருப்பூர்: சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்தநாளான இன்று(அக்.4) அவரது சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள தியாகி திருப்பூர் குமரனின் நினைவு மண்டபத்தில், "தமிழ்நாடு அரசின் சார்பில்" தியாகி திருப்பூர் குமரன் உருவ சிலைக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.