திருப்பூரில் சைவம், அசைவம் என கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து வைக்கும் திமுக திருப்பூர்:திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டமானது திருப்பூர் காங்கேயம் அருகே படியூர் சிவகிரியில் இன்று (செப். 24) நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. திமுகவின் 14 மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் முகவர்கள், 5 ஆயிரம் திமுக நிர்வாகிகள் என 20 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இதற்காக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய தோற்றத்தின் முகப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக தனித்தனி வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவ, அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை பாசறை கூட்டப்பந்தலில் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ், மாநகர மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பாசறைக் கூட்ட பந்தலுக்கு வருகை தரும் நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு (QR CODE) உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். வருகிறவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் போட்ட டி-சர்ட், அவரது உருவம் பொறித்த மஞ்சள் பை தண்ணீர் பாட்டில், மிக்சர், பிஸ்கெட், ஃப்ரூட்டி ஜூஸ் ஆகியவை வழங்கப்பட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு அசைவம், சைவம் என தனித்தனி கவுண்டர்களில் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க:பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா திருமணம்! பாரம்பரிய சடங்குகளுடன் கோலாகல கொண்டாட்டம்!