திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (செப்.6) புதிதாக 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இன்று 153 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Tiruppur Latest News
திருப்பூர் : கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று (செப்.6) புதிதாக 153 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Breaking News
இதில், சிகிச்சை பெற்று வந்த 139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 1,079 பேர் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் இன்று (செப்.6) சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.