திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூரில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பூர் : திருப்பூரில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
Tiruppur Corona Update News
திருப்பூர் கருவம்பாளையம் அய்யன்நகரை சேர்ந்த 37 வயதுடைய ஆண் கடந்த 29ஆம் தேதி காய்ச்சல் காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர், பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.