மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் - Agriculture act 2020
திருப்பூர்: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
CPM protest
மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக செயல்பட்டுவருவதாகத் தெரிவித்து, திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு அந்நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.