திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் அதன் மாநில செய்தி தொடர்பாளர் தாதா நாயக்கர் மனு அளித்தார்.
அந்த மனுவில், "தமிழ் தேசியம் என்ற பெயரில் தெலுங்கு சமுதாய மக்களை வந்தேறிகள் என சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இனம், மொழி ரீதியான பிரிவினையை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் உள்ளது.