தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பில்லாத மாவட்டமான திருப்பூர்! - கரோனா இல்லா மாவட்டம் திருப்பூர்

திருப்பூர்: மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியது.

கரோனா பாதிப்பில்லாத மாவட்டமான திருப்பூர்!
கரோனா பாதிப்பில்லாத மாவட்டமான திருப்பூர்!

By

Published : May 11, 2020, 9:48 PM IST

திருப்பூர் மாவட்டத்தில், முதன் முதலாக லண்டன் சென்று வந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின்னர், மாநாடு ஒன்றிற்குச் சென்று வந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மேலும் கோயம்பேட்டிலிருந்து திருப்பூர் திரும்பிய ஓட்டுநர்கள் இருவருக்கும் கரோனா உறுதியான நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருவரும் இன்றைய தினம் வீடு திரும்பினர்.

மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பதிவு

இதனையடுத்து, தற்போது கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த எட்டு நாட்களாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படாத நிலையில், சிவப்பு மண்டலத்திலிருந்து திருப்பூர் தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

இதையும் படிங்க...மாற்றுத்திறனாளியான கணவருடன் நடந்தே செல்லும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details