தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோரி விழிப்புணர்வு கூட்டம் - திருப்பூர் செய்திககள்

திருப்பூர்: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற விழிப்புணர்வு செயல்முறை கூட்டத்தில் காவல்துறையினர் வலியுறுத்தினர்.

meet
meet

By

Published : Sep 3, 2020, 3:30 PM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், தற்போது இ-பாஸ் ரத்து, மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்து, தேவாலயங்கள், மசூதி, கோயில்கள் திறக்கப்படலாம் உள்பட பல தளர்வுகளை அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோயில்கள், ஆலயங்கள், பேருந்து போக்குவரத்து வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, கரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் காவல்துறை சார்பில் நடைபெற்றது. இதில், ஆலயங்கள் மசூதிகள், கோயில்களில் இருந்து நிர்வாகிகளும், அதேபோல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், வழிபாட்டுத் தலங்களில் நுழைவதற்கு முன் கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்வதோடு உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும், தகுந்த இடைவெளியுடன் வழிபாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:வடபழனி முருகன் கோயில் மீண்டும் திறப்பு - பக்தர்கள் வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details