தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர் கண்களில் மிளகாய்பொடியைத் தூவி ரூ.1.45 லட்சம் கொள்ளை!

திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு மதுபானக் கடை ஊழியரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி ரூ. 1.45 லட்சம் பறித்துச் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

tasmac
tasmac

By

Published : Sep 8, 2020, 12:32 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது கரையூர். இங்கு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்குள் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.

டாஸ்மாக்

கரையூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகத் தாராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் உதவியாளர்களாக கோவிந்தசாமி, சக்திவேல் ஆகியோர் கடையில் இருந்தனர்.

நேற்று இரவு கடையின் விற்பனை முடிந்து கணக்குகளைச் சரிபார்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர் சுரேஷிடம் மதுபானம் வாங்கினர். அப்போது எதிர்பாராத நிலையில் தான் மறைத்துவைத்திருந்த மிளகாய்ப்பொடியை சுரேஷின் கண்களில் தூவி, கல்லாப்பெட்டியிலிருந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 390 ரூபாயையும் அவர் கைகளில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க மோதிரத்தையும் பறித்தனர்.

தொடர்ந்து உதவியாளர்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி சப்தம் செய்தல் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு பணத்துடன் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.

காவலர் விசாரணை
சம்பவம் குறித்து மூலனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் டாஸ்மாக் கடை விற்பனையாளர், உதவியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திசா மிட்டல் பார்வையிட்ட பின்னர் விசாரணையை துரிதப்படுத்திவருகிறார். டாஸ்மாக் கடையில் பணம், நகை பறித்துச் சென்ற சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடம் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details