தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தல் செலவினம் -அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் - திருப்பூர் அனைத்துக் கட்சிக் கூட்டம்

திருப்பூர்: சட்டப்பேரவை தேர்தல் செலவினம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் அளித்த விலைப்பட்டியல் கூடுதலாக இருப்பதாக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

election news
திருப்பூரில் சட்டப்பேரவை தேர்தல் செலவினம் குறித்த-அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்

By

Published : Mar 3, 2021, 8:05 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செலவினங்கள் குறித்து, அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூரில் சட்டப்பேரவை தேர்தல் செலவினம் குறித்த-அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்

இக்கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட விலை பட்டியலில் தண்ணீர் பாட்டில், மின்சாரம், பந்தல், மண்டபம் உள்ளிட்டவைகளின் செலவினங்கள் அதிகளவு காட்டப்பட்டுள்ளதாகவும், மார்க்கெட் விலையோடு ஒப்பிடாமல் அதிகளவு இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, ஏதுவாக கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட ஆட்சியர் இன்று முதல் செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: அமமுகவின் எதிர்காலம்... அதிரடி அரசியலை தொடங்கிய தினகரன்

ABOUT THE AUTHOR

...view details