திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்ஜெய், இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியிலிருந்து பணிமாறுதல் பெற்று தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்க முற்படும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் தாவரவியல் ஆசிரியர் செய்முறைத் தேர்விற்காகக் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும் படி கூறியுள்ளார்.