தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற ரவுடி பேபி சூர்யா! - டிக் டாக் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி

திருப்பூர்: டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா வெளிநாட்டில் இருந்து வந்ததால் சொந்த ஊரில் தனிமைபடுத்தப்பட்டார். இந்த மன உளைச்சல் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tik tok fame Rowdy Baby Surya Attempt suicide in tiruppur
tik tok fame Rowdy Baby Surya Attempt suicide in tiruppur

By

Published : Jun 22, 2020, 1:20 PM IST

திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக் டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.

இவரது அத்துமீறிய வீடியோக்களால் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டு நாளடைவில் அதனையே தனது பெயரை மாற்றினார் சூர்யா. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கே அவருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16-ஆம் தேதி வந்தார். சிங்கப்பூரில் இருந்து அவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் சுகாதாரத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து இவரை அலுவலர்கள் அழைத்துச்சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸையும் ஓட்டிச்சென்றனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சூர்யா இன்று (ஜுன் 22) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவரை கரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இதையும் படிங்க... டிக் டாக் ரவுடி பேபி சூர்யா மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details