தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு - மருத்துவ வசதி இல்லை என குற்றச்சாட்டு

திருப்பூர்: டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

tirupur
tirupur

By

Published : Jan 2, 2020, 9:50 AM IST

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பனியன் தொழிலாளி ஜாகீர் உசேன். இவரது மனைவி அசீனா பானு. இந்த தம்பதியின் இளைய மகன் முகமது பாயீஸ்(8) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் தனது மகன் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வேறு காரணங்களை சொல்வதாகவும், திருப்பூரில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

மேலும் திருப்பூரில் டெங்குவால் பாதிக்கப்படும் மக்கள் பெரும்பாலும் கோவைக்குச் செல்வதாகவும், திருப்பூரிலேயே டெங்கு காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்க அரசு உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு அரியலூரில் பெண் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details