தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது! - கல்லூரி சாலையில் கஞ்சா விற்பனை

திருப்பூர்: கல்லூரி சாலையில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டடு அவர்களிடமிருந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

cannabis sales persons in tiruppur

By

Published : Nov 20, 2019, 11:33 AM IST

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட வடக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்தபோது வசந்தி(55) என்பவர் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் அவருக்கு உதவியாக ரமேஷ்(27), சிவா(25) என்ற இருவரும் செயல்பட்டது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.

இதனையடுத்து அவர்களைக் கைது செய்த திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் துறையினர் அவர்களிடமிருந்த 3.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details