திருப்பூர் அடுத்த ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அபர்ணா என்பவரின் வீட்டை சுற்றியும் துர்நாற்றம் வீசுவதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் கதைவை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர், மூன்று சடலங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர், சடலங்களை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் அபர்ணா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள தனது தந்தை வெள்ளியங்கிரி வீட்டில் தனது மகன் ஜித்தின் உடன் வசித்து வந்துள்ளார்.
அபர்னாவின் தாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இயற்கை மரணம் அடைந்துள்ளார். அன்று முதலே மனமுடைந்து காணப்பட்ட அபர்ணா கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனைக் கண்டு, மனமுடைந்த அபர்ணாவின் தந்தை வெள்ளியங்கிரியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த இரு உறவுகளின் இறப்பையும் நேரில் கண்ட அபர்ணாவின் மகன் ஜித்தின் செய்வதறியாமல் மூன்று நாள்களாக இறந்த உடல்களை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுக்கு செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்ட ஜித்தின், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.