திருப்பூர்:நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், 100 கோடி வர்த்தக இழப்பும் ஏற்படும் எனவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிகிறது.
இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சிறு குறு நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் நூல் விலை 240 ரூபாய் என வரலாறு காணாத அளவிற்கு ஏற்றத்திற்கு சென்றுள்ளது.