தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார். தஞ்சாவூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்றிரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், பேச்சிமுத்துவின் உடலைக் கைப்பற்றினர். மேலும், உடல் அருகே இருந்த இரண்டு பட்டா கத்திகள், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.