தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எலைட் வேர்ல்ட் ரெக்கார்டில் புதிய மைல்கல்லை பதித்த தமிழர்!

திருப்பூர்: யோகா ஆசிரியர் குணசேகரன் 11 நாட்களில் 1001 யோகாசனங்கள் செய்து தனி நபர் உலக சாதனை படைத்து எலைட் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

world record
யோகா ஆசிரியர்

By

Published : Jan 4, 2020, 1:54 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் . இவர் யோகா ஆசிரியராக பணிபுரிகிறார். மேலும் யோகாசனத்தில் பல்வேறு உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக யோகாசனத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தவும், பாரம்பரிய மருத்துவக் கலையை மீட்கவும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி 11 நாட்களில் 1001 யோகாசனங்கள் செய்து தனி நபர் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 10 நாட்களில் 962 யோகசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில், இன்று 11 ஆவது நாளாக 39 யோகாசனங்கள் செய்து எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் தனிநபர் சாதனை படைத்துள்ளார். காலை 7 மணிக்கு தொடங்கிய இவரின் சாதனை முயற்சி நன்பகல் 12 மணிக்குள் 39 யோகாசனங்களை செய்து உலகிலேயே 11 நாட்களில் 1001 யோகாசனங்கள் செய்த தனிநபர் என்ற உலக சாதனை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சாதனை பட்டியலில் புதிய மைல்கல்லை பதித்த யோகா ஆசிரியர்

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் தனிநபர் பிரிவில் 11 நாட்களில் இந்த உலக சாதனையை நிகழ்த்தியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதன்முறை என்பதால் பல்வேறு விதமான பொருட்கள் மீது யோகாசனங்களை செய்தேன்" என்றார்.

பின்னர் இந்திய ஆய்வாளர் கார்த்திகேயன் ஜவகர், இந்தியா ரெக்கார்ட் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் நிர்வாகி ஜெகநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து எலைட் உலக சாதனைக்கான சான்றுகளை அவருக்கு வழங்கினார்கள்.

இதையும் படிங்க: பேட்ஸ்மேன் முதலமைச்சர், பவுலர் அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details