திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவருக்குச் சொந்தமாக ரூ. 1.50 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 600 சென்ட் நிலம் உள்ளது. இவர் 2009ஆம் ஆண்டு, தாயார் மருத்துவச் செலவிற்காக சந்திரசேகர் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு தனது நிலப்பத்திரத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் கடன் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்து நிலப்பத்திரத்தை கேட்டபொழுது பத்திரத்தை கொடுக்காமல் போலி பத்திரங்கள் தயார்செய்து நிலத்தை கிரையம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, தற்போது கோவை, திருப்பூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சென்னியப்பன் புகார் மனு அளித்துள்ளார்.