தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென தீப்பிடித்த இந்து முன்னணி நிர்வாகியின் கார்! - tamilnews

திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகியின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்
திருப்பூர்

By

Published : Feb 12, 2020, 10:05 AM IST

Updated : Feb 12, 2020, 10:17 AM IST

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னணியின் திருப்பூர் கோட்ட செயலாளராக உள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் எப்போதும் போல காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர் இருந்தும் கார் முழுவதுமாக எரிந்து விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீ விபத்திற்கான காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரேனும் தீ பற்ற வைத்தனரா ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு வாசலில் நிறுத்திய கார் திடீரென தீயில் எரிந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தீப்பிடித்த இந்து முன்னனி நிர்வாகி கார்

இதையும் படிங்க: நாமக்கலில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த ஓட்டல் தொழிலாளி கைது!

Last Updated : Feb 12, 2020, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details