திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள முற்புதர் ஒன்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், உயிரிழந்த இளைஞரின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததோடு, கொலை நடந்து இரண்டு நாள்கள் இருக்கக்கூடும் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (23) என்பதும், இவர் குடும்பத்தோடு வெள்ளியங்காடு பகுதியில் தங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவந்ததும் தெரியவந்துள்ளது.