கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களைக் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் பிரதிபா முகர்ஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் ரயில் நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுபோன்ற தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அரசு மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.