தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக குளத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தைச் சோதனை செய்ததில் அதில் ஒரு கோடியே 11 லட்சத்து நான்காயிரத்து 204 ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் இந்தப் பணம் தனியார் நிறுவனம் மூலம் நகைக் கடையிலிருந்து பெறப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டுசெல்வதாகத் தெரிவித்த நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், வருமானவரித் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் உடனடியாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்குப் பின் வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பதறவைக்கும் பறக்கும் படை... கதறித் துடிக்கும் வர்த்தகர்கள்!