திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவலர்கள் பொதுமக்களிடையே போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப்பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி! - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்
திருப்பூர்: போலிமதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
தென்னம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய இப்பேரணியானது எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘முறையற்ற செயலை செய்து அதிமுக வெற்றி’ - திருப்பூர் எம்.பி. விமர்சனம்!