திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் தண்ணீரானது உடுமலைப்பேட்டையில் உள்ள வாய்க்கால் வழியாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு சென்றடைகிறது.
வாய்க்காலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை!
திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் வாய்க்கால் புதுப்பிக்கப்படாததால், அதன் உட்புறத்தில் மண் அரிக்கப்பட்டு, அது தண்ணீருடன் கலந்துவருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வாய்க்கால்
கடந்த ஏப்ரல் மாதம் திருமூர்த்தி அணை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வழியான வாய்க்கால் இன்னும் புதுப்பிக்கப்படததால், அதன் உட்பறத்தில் மணல் அரிக்கப்பட்டு அணையில் இருந்து வரும் தண்ணீரோடு கலந்து வருகிறது. இதனால் அதை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.