திருப்பூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவைக்கு கிளம்பியது. அந்தப் பேருந்து பல்லடம் அருகே சென்றபோது மக்கள் கூட்டமாக ஏறினர். இதனைக் கண்ட நடத்துனர் அசோக்ராஜ் அவர்களை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது முதியவர் ஒருவர் சாலையில் விழுந்ததைக் கண்டு அவருக்கு அசோக்ராஜ் உதவச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூடவே நடத்துனர் பையில் இருந்த 13 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதனால் அசோக்ராஜ் பேருந்தை உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றார்.
அங்கு அனைத்து பயணிகளையும் சோதனை செய்தப் பிறகும் பணம் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் அசோக்ராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு பேருந்தை கோவைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...'திருட எதுவுமில்லை' - மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் மட்டையான திருடன்!